நிந்தன் நினைவுகள்
இந்த நாளில் இதே நேரத்தில் இரண்டு வருடங்கள் கழித்து சந்திக்கலாம். இவள் என்றும் உனக்கே " என்று கூறி மற்றுமொரு முத்தமிட்டாள்.
இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் இருவரும் சந்தித்தனர். அதே சிரித்த முகம் , அவளைத் தேடி வந்தது மற்றுமொரு துணையோடு . அவளை ஏமாற்றக்கூடாது என்ற எண்ணத்தில் அவன் அங்கு வந்திருந்தான். அவனுடன் வந்த பெண்ணைப் பார்த்ததும் அவளுக்கு ஒரு வித தடுமாற்றம் ஏற்பட்டது. அந்நிலையில் அவன் ஏதோ சொல்ல முயன்றான். அதைக் கணித்த அவள் அமைதியுற நின்றாள். அவன் கதையை சொல்ல ஆரம்பித்தான். " அன்று கடைசிநாள் உன்னைப் பார்த்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் இவள் தன் பெற்றோருடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாள். எதிர்பாராத விதமாக என்னுடைய கார் இவளுடைய வாகனம் மீது மோதி கோர் விபத்து ஏற்பட்டு இவளுடைய பெற்றோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சிறு காயங்களுடன் தனியாக நின்ற இவளுக்கு எவ்விதமும் ஆறுதல் கூற இயலாப் பாவியாய் நின்றேன். நடந்தவற்றை எல்லாம் என் பெற்றோரிடம் கூறினேன். அவர்கள் இவளின் சுற்றத்தாரிடம் பேசி என் வீட்டிற்கு அழைத்து வந்தனர். பிறகு நான் அயல் நாடு செல்ல புறப்பட்டபோது 'என்னை மணந்து விட்டு நீ அயல் நாடு செல் ' என்று முதன்முதலாக என்னிடம் பேசினாள் . இவள் கூறியதை முழுமனதுடன் ஏற்க முடியவில்லை. எதற்கும் திருமணம் ஒரு தீர்வாகதல்லவா?? . முதலில் மறுத்தேன். பிறகு பெற்றோரின் வற்புறுத்தலின்பேரில் மணந்து விட்டு என் பெற்றோரிடம் விட்டுச் சென்றேன். என்னை மணந்தவளுக்கு துரோகம் செய்ய கூடாது என்ற எண்ணம் தோன்றவே இங்கு இவளை அழைத்து வந்தேன். என்னை மன்னிக்கவும் என்று கூறி அமைதியானான். கண்களில் நீர் ததும்ப நின்ற அவள் அவனுடைய மனைவியிடம் ஒரு நிமிடம் அனுமதி கேட்கவே ஏதும் அறியாதது போல விலகி நின்றாள்.
இரவு பகல் தெரியாது பித்து பிடித்தது போலானாள். மீண்டும் புத்தகங்களில் மூழ்கினாள் தன் காதலனைப் தேடி. தான் படிக்கும் புத்தகங்களில் அவன் முகம் தென்படவே அதனை இன்னும் ஆழமாக மூழ்கினாள். இதனையே வாழ்க்கை இலட்சியமாக வைத்து வாழ்ந்தாள். தன் அறையையே நூலகமாக்கினாள். புத்தகங்களுடன் வாழ்வதை அவனுடனே வாழ்கிறேன் என்று கருதினாள் . திடீரென்று ஒரு சத்தம் ' நிலா எழுந்திரு சாயுங்காலம் 6 மணிக்கு இப்படியா தூங்குவது' என்று நிலாவின் அம்மா அவளை எழுப்பினாள். சட்டென்று எழுந்து அவள் விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.
ஏனெனில் , அந்த நாள் அவள் இரண்டாம் ஆண்டு கல்லூரிக்கு செல்லும் முந்தைய நாள். சட்டென்று தேநீரை அவளது அம்மா நீட்டி " என்ன மீண்டும் கனவா " என்று சிரித்தபடி கேட்டாள். அதற்கு நிலா " ஆம் ஒரு சோகக்கதை . நன்றாகவே இல்லை " என்று என்று கூறி அம்மாவை திசைதிருப்பினாள். அறையை விட்டு அம்மா வெளியேறியதும் ஆழ்ந்த குழப்பத்திற்குள்ளானாள் நிலா வரும் நேரத்தில் அந்த பெண் நிலா !!!!!.
Comments
Post a Comment