Posts

தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்.

எவராலும் அழிக்க இயலா  எம்மொழி தமிழ்மொழி எப்புயற்காற்றடித்தும் தடம்புரளா புதுமொழி எம் தமிழ்மொழி இயலும் இசையும் நாடகமும் இடம்பெற்ற செம்மொழி அதுவே நம் மொழி குமரி முதல் காஷ்மீர் வரை மட்டுமல்லாது உலகம் முழுதும் உள்ள மொழி எம்மொழி அதுவே தமிழ்மொழி உயிர்க்கும் போதே நீடித்து வாழும்  வரம் பெற்ற மொழி எம்மொழி அகத்தியரும் தொல்காப்பியரும், கம்பரும் ஒட்டக்கூத்தரும், ஔவையும் ஆத்திச்சூடியும் போல  நானும் என் தாய்மொழி தமிழும்! செம்புலபெயல் நீர் போல அன்புளம் கொண்டு வாழ்வோர் எம்மொழி பேசும் அன்பு மக்களே எண்ணிலடங்கா இலக்கியங்களின் தொகுப்பும், எழுதிமுடிக்க இயலா  கவிதைகளின் வரிகளையும் ஆட்கொள்வது எம்மொழி மட்டுமே சிற்பமும், ஓவியமும், கதையும், கவிதையும், நடனமும், பாடலும் என்று  அடுக்கிக் கொண்டே செல்லலாம் எம்மொழியாம் தமிழ்மொழி எவற்றில் சிறந்ததென்று செங்கதிரும், செந்நீரும், இளந்தென்றலும், மெல்லிய வண்ண மலரும் கலந்து செய்த ஓரதிசயம் எம்மொழி தமிழ்மொழி வெண்கொற்றக்குடையின் கீழ் செங்கோல் ஏந்தி ஆட்சி செய்த எம்மன்னனும் , எம்மக்களும் அறிந்துணர்ந்த ஆர்ப்பரிக்கும் ஆற்றலைக் கொண்ட என் தாய்மொழி அதுவே நம் மொ...

தன்னம்பிக்கை

துவண்ட நம் கனவுகளுக்கு உயிர் கொடுக்க போவது ‌இம்மானிடவுலகில் நம்மைத்தவிர  மாற்றார்  மாற்றத்திற்கு வேண்டுமோ ?? - இல்லவே இல்லை..  அகம் கொண்ட அளவற்ற ஆசைக்கு ஊட்டமளித்து  புத்துயிர் கொடுத்து புரட்சிகர பாணியில் வழிநடத்திச் செல்ல  நம் அகத்தின் எண்ணங்களால் மட்டுமே இயலும்.  நமக்கு கொடுக்கப்பட்ட வலிகள், காயங்கள், அவமானங்கள், அசிங்கங்கள் இவற்றை விடவும் குரூரமான ஒன்று உள்ளது அதுதான் பயம்.  எதையெதையோ கடந்து வந்த நாம் இங்கே தடைபட்டு,  உடைபட்டு நிற்கிறோம் என்றால் அதற்கு நாம் மட்டுமே காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.  பொறுப்பற்ற சமூகமும் அதனை உருவாக்கிய  ஆளுமைகளும்கூட காரணங்களே !.  சிற்றின்பம் தேடி சிதைந்த நம்மில் பலருக்கு பேரின்பம் எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது காரணம் பயமே.   துரத்தும் தூரத்தில் தான் உள்ளது அனைத்து வன்மங்களும்.  துயர் நீக்கி வழி மேல் விழி வைத்து கண்ணும் கருத்துமாக தொடர்வோம் நம்   பயணத்தை நம் ஆசை இலக்குகளோடு... 

பிரியாவிடை

கடிதங்கள் மட்டும் இருந்த காலகட்டத்தில்...... பிரியமுள்ள தோட்ட அண்ணாவுக்கு,                அன்புத் தங்கச்சி எழுதுறது. நா இங்க நல்லா இருக்க அண்ணே. நீங்க எப்புடி இருக்கீங்க??. நீங்க சொல்லிக்குடுத்தமாரி தினமும் பள்ளிக்கூடத்துக்கு போற. வாத்தியார்கிட்ட திட்டு கூட வாங்கறது இல்லே.. நாம ரெண்டு பேரும் சேர்ந்து எத்தனை தடவை காட்டுக்குள்ள சுத்திருக்கோம். ஆனா இப்போ காட்டுக்குள்ள போகவே விடரது இல்லே. எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு ணே . வீட்டுலயும் என்ன சும்மா வஞ்சுட்டே இருக்காங்க.. சீக்கிரமே ஊருக்கு வாங்க. நம்ம வச்ச செடிலா நல்லா வளந்துருச்சு. நெறைய பலன் குடுக்குது. நான் உங்களுக்கு புடிச்ச கடலை மிட்டாய் நம்ம ஊரு கடைல வாங்கி வச்சிருக்க. சீக்கிரம் வாங்க இல்லன்னா  எறும்பு சாப்புட்டுரும். மறக்காம இந்த கடிதாசிய படிச்சுடுங்க.                                 இப்படிக்கு,                           உங்க தங்கச்சி  ...

நீ - கற்பனைக் காவியம்..

காயம் தரும் கண்ணீரும் நீயே காயமாற்றும் களிம்பும் நீயே  அனிச்சமென நானும் இங்கே தேனீயென நீயும் எங்கோ  இப்பாரினில் உலவுகிறாய் ஒற்றைக்கால் கொக்கென தவம் செய்து கொண்டுதான் இருக்கிறேன் உம்மை நினைத்து.. மழலை மொழிகின்ற  சொல்லென நீ - அதனைக் கண்டு மகிழ்ச்சியுறும் தாயென நான் ...  உலக உயிர்கள் கண்டு மகிழும் கதிரவன் போல என்  வாழ்வுதனை ஒளியூட்டினாய்.. அன்பே ஆருயிரே என்று உம்மை வர்ணிப்பதா ??  இல்லை அகம் அறிந்த கள்வன் என பரிகாச படுத்துவதா?? எப்படியேனும் யாம் அறிந்த உயிர்களிலிலே அமிழ்தினும் இனிய உம்மை என்றும் கற்பனை வாழ்வினிலே சேகரித்து கொண்டு தான் வருகிறேன் ‌முப்பொழுதும் உம் கற்பனையில் ‌..... 

நிந்தன் நினைவுகள்

பதின்மபருவத்தில் தோன்றும் ஒரு வித பாலின ஈர்ப்பு அவளுக்கும் ஏற்பட்டது. ஆம். அவள் கல்லூரியில் பயிலும் போது அவளுக்கும் காதல் விபத்து ஏற்பட்டது. அவன் தன் விருப்பத்தை அவளிடம் கூற முற்பட்டான். அதற்கு அவளோ சற்று வித்தியாசமாக அனைவர் கூறுவதிலிருந்து மாறுபட்டு"எனக்கும் உன் மீது காதல் உள்ளது எப்படி வெளிக்கொணர்ந்து என்று சொல்ல முடியாமல் தத்தளித்தேன். நல்லவேளை நீயே வந்து சொல்லிவிட்டாய். மிக்க நன்றி" என்றாள். அவனுக்கு ஒரே வியப்பு. இப்படி ஒரு பெண்ணா என்று வியப்பில் ஆழ்ந்த அவன் பிறகு தெளிந்தான்.                 அவன் கல்வியில் அதிக நாட்டம் உடையவன். அவளும் அப்படியே. புத்தகங்களே காதல் என்று இருந்தவர்கள் புத்தகங்களுக்கிடையில் காதல் என்றானார்கள். அவனுக்கு இறுதியாண்டு கல்லூரி படிப்பு தொடக்கம். அவளுக்கு இரண்டாம் ஆண்டு கல்லூரி படிப்பு.இவர்களின் காதல் சற்று வித்தியாசமாக இருந்தது. பார்த்தும் பேசாமல் குறுஞ்செய்தி அனுப்பாமல் அழைப்புகளின்றி தனித்த நிலையில் காதல் செய்தனர். இவர்களின் சந்திப்பே ஆறு மாதத்திற்கு ஒரு முறை மட்டுமே. கதாநாயகனுக்கு இறுதியாண்டு இறுதி நாள் கல்லூரி. ...