தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்.

எவராலும் அழிக்க இயலா 
எம்மொழி தமிழ்மொழி

எப்புயற்காற்றடித்தும் தடம்புரளா
புதுமொழி எம் தமிழ்மொழி

இயலும் இசையும் நாடகமும்
இடம்பெற்ற செம்மொழி அதுவே நம் மொழி

குமரி முதல் காஷ்மீர் வரை மட்டுமல்லாது உலகம் முழுதும் உள்ள மொழி எம்மொழி அதுவே தமிழ்மொழி


உயிர்க்கும் போதே நீடித்து வாழும் 
வரம் பெற்ற மொழி எம்மொழி

அகத்தியரும் தொல்காப்பியரும்,
கம்பரும் ஒட்டக்கூத்தரும்,
ஔவையும் ஆத்திச்சூடியும் போல 
நானும் என் தாய்மொழி தமிழும்!

செம்புலபெயல் நீர் போல அன்புளம் கொண்டு வாழ்வோர் எம்மொழி பேசும் அன்பு மக்களே

எண்ணிலடங்கா இலக்கியங்களின் தொகுப்பும், எழுதிமுடிக்க இயலா 
கவிதைகளின் வரிகளையும் ஆட்கொள்வது எம்மொழி மட்டுமே

சிற்பமும், ஓவியமும், கதையும், கவிதையும், நடனமும், பாடலும் என்று  அடுக்கிக் கொண்டே செல்லலாம் எம்மொழியாம் தமிழ்மொழி எவற்றில் சிறந்ததென்று

செங்கதிரும், செந்நீரும், இளந்தென்றலும், மெல்லிய வண்ண மலரும் கலந்து செய்த ஓரதிசயம்
எம்மொழி தமிழ்மொழி

வெண்கொற்றக்குடையின் கீழ் செங்கோல் ஏந்தி ஆட்சி செய்த எம்மன்னனும் , எம்மக்களும்
அறிந்துணர்ந்த ஆர்ப்பரிக்கும்
ஆற்றலைக் கொண்ட என் தாய்மொழி அதுவே நம் மொழி


உம்மை நெருங்க இயலாது எம்மொழியும்
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" - பாரதியார் 

Comments

Popular posts from this blog

நிந்தன் நினைவுகள்

பிரியாவிடை