பிரியாவிடை
கடிதங்கள் மட்டும் இருந்த காலகட்டத்தில்......
பிரியமுள்ள தோட்ட அண்ணாவுக்கு,
அன்புத் தங்கச்சி எழுதுறது. நா இங்க நல்லா இருக்க அண்ணே. நீங்க எப்புடி இருக்கீங்க??. நீங்க சொல்லிக்குடுத்தமாரி தினமும் பள்ளிக்கூடத்துக்கு போற. வாத்தியார்கிட்ட திட்டு கூட வாங்கறது இல்லே.. நாம ரெண்டு பேரும் சேர்ந்து எத்தனை தடவை காட்டுக்குள்ள சுத்திருக்கோம். ஆனா இப்போ காட்டுக்குள்ள போகவே விடரது இல்லே. எனக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கு ணே . வீட்டுலயும் என்ன சும்மா வஞ்சுட்டே இருக்காங்க.. சீக்கிரமே ஊருக்கு வாங்க. நம்ம வச்ச செடிலா நல்லா வளந்துருச்சு. நெறைய பலன் குடுக்குது. நான் உங்களுக்கு புடிச்ச கடலை மிட்டாய் நம்ம ஊரு கடைல வாங்கி வச்சிருக்க. சீக்கிரம் வாங்க இல்லன்னா எறும்பு சாப்புட்டுரும். மறக்காம இந்த கடிதாசிய படிச்சுடுங்க.
இப்படிக்கு,
உங்க தங்கச்சி
ஆனந்தி..
பாவம் இந்த ஐந்தாம் வகுப்பு சிறுமி ஆனந்தி . இறந்த ஒருவருக்காக இப்படி கடிதம் ஒன்றின் வாயிலாக தனது அன்பை வெளிப்படுத்தும் இவள் அபூர்வமானவளே. இவளுடைய தோட்ட அண்ணா என்பவர் மலைக்கிராமம் ஒன்றிற்கு தோட்டக்கலைத்துறையில் பணிபுரிந்து வந்த ஒரு சாதாரண அதிகாரி. இவர் ஆனந்தியின் வீட்டின் ஒரு அறையில் வசித்து வந்தார். இவர் ஆனந்தியின் வீட்டிற்கு வந்தபின் தான் அப்பப்பா ஆனந்தியிடம் எவ்வளவு மாற்றங்கள். அதுவரை துடுக்குகாக இருந்தவள் சற்று அனைவரிடமும் பணிந்து செல்லலானாள்.. திடீரென ஒரு நாள்..
_தொடரும்
Comments
Post a Comment