நீ - கற்பனைக் காவியம்..


காயம் தரும் கண்ணீரும் நீயே காயமாற்றும் களிம்பும் நீயே 

அனிச்சமென நானும் இங்கே தேனீயென நீயும் எங்கோ  இப்பாரினில் உலவுகிறாய்

ஒற்றைக்கால் கொக்கென தவம் செய்து கொண்டுதான் இருக்கிறேன் உம்மை நினைத்து..

மழலை மொழிகின்ற  சொல்லென நீ - அதனைக் கண்டு மகிழ்ச்சியுறும் தாயென நான் ... 


உலக உயிர்கள் கண்டு மகிழும் கதிரவன் போல என்  வாழ்வுதனை ஒளியூட்டினாய்..

அன்பே ஆருயிரே என்று உம்மை வர்ணிப்பதா ??  இல்லை அகம் அறிந்த கள்வன் என பரிகாச படுத்துவதா??
எப்படியேனும் யாம் அறிந்த உயிர்களிலிலே அமிழ்தினும் இனிய உம்மை என்றும் கற்பனை வாழ்வினிலே சேகரித்து கொண்டு தான் வருகிறேன் ‌முப்பொழுதும் உம் கற்பனையில் ‌..... 

Comments

Popular posts from this blog

தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்.

நிந்தன் நினைவுகள்

பிரியாவிடை