தன்னம்பிக்கை
துவண்ட நம் கனவுகளுக்கு உயிர் கொடுக்க போவது இம்மானிடவுலகில் நம்மைத்தவிர மாற்றார் மாற்றத்திற்கு வேண்டுமோ ?? -
இல்லவே இல்லை..
அகம் கொண்ட அளவற்ற ஆசைக்கு ஊட்டமளித்து புத்துயிர் கொடுத்து புரட்சிகர பாணியில் வழிநடத்திச் செல்ல
நம் அகத்தின் எண்ணங்களால் மட்டுமே இயலும்.
நமக்கு கொடுக்கப்பட்ட வலிகள், காயங்கள், அவமானங்கள், அசிங்கங்கள் இவற்றை விடவும் குரூரமான ஒன்று உள்ளது அதுதான் பயம்.
எதையெதையோ கடந்து வந்த நாம் இங்கே தடைபட்டு, உடைபட்டு நிற்கிறோம் என்றால் அதற்கு நாம் மட்டுமே காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.
பொறுப்பற்ற சமூகமும் அதனை உருவாக்கிய ஆளுமைகளும்கூட காரணங்களே !.
சிற்றின்பம் தேடி சிதைந்த நம்மில் பலருக்கு பேரின்பம் எட்டாக் கனியாகவே இருந்து வருகிறது காரணம் பயமே.
துரத்தும் தூரத்தில் தான் உள்ளது அனைத்து வன்மங்களும்.
துயர் நீக்கி வழி மேல் விழி வைத்து கண்ணும் கருத்துமாக தொடர்வோம் நம் பயணத்தை நம் ஆசை இலக்குகளோடு...
Comments
Post a Comment